Asianet News TamilAsianet News Tamil

விறு விறுப்பாக நடக்கும் மத்தியப் பிரதேசம்,சத்தீஸ்கர் வாக்குப்பதிவு.!பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட துணை ராணுவம்

மினி நாடாளுமன்ற தேர்தல் என்றழைக்கப்படும் 5 மாநில தேர்தலில், தற்போது மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. விறு விறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 
 

Voting has started in Madhya Pradesh and Chhattisgarh KAK
Author
First Published Nov 17, 2023, 9:21 AM IST | Last Updated Nov 17, 2023, 9:21 AM IST

விறு விறுப்பாக வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தல் இன்றும் 5 மாதத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக எந்த கட்சிக்கு ஆதரவு உள்ளது என்பதை அறியும் வகையில் மினி நாடாளுமன்ற தேர்தலாக தற்போது நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்தவகையில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.  மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 

Voting has started in Madhya Pradesh and Chhattisgarh KAK

பாதுகாப்பு பணியில் துணை ராணுவம்

இந்ந்த தேர்தலுக்காக 64,726 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 73,622 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.  5.6 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மத்திய பிரதேச தேர்தல் களத்தில் 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 64 ஆயிரம் வாக்குச்சாவடியில் 17032 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து 700 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் மாநில காவல் துறையை சேர்ந்த 2 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Voting has started in Madhya Pradesh and Chhattisgarh KAK
வாக்கு எண்ணிக்கை எப்போது.?

இதே போல சத்தீஸ்கரில் நவம்பர் 7ம் தேதி 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.  2ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 70 தொகுதிகளில் மொத்தம் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  18,833 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், துணை முதல்வர் சிங் தேவ் உள்ளிட்டோர் 2ம் கட்ட தேர்தல் களத்தில் முக்கிய வேட்பாளராக உள்ளனர்.இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகிறது.

இதையும் படியுங்கள்

உச்சத்திலையே நீடிக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி விலை.! கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை என்ன.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios