விஷு பம்பர் லாட்டரி முடிவுகள் நேற்று வெளியான நிலையில் VD 204266 என்ற டிக்கெட்டுக்குத்தான் ₹12 கோடி முதல் பரிசு விழுந்தது.

ஒரு மாத கால எதிர்பார்ப்புக்குப் பிறகு, விஷு பம்பர் லாட்டரி முடிவுகள் நேற்று வெளியாகின. VD 204266 என்ற டிக்கெட்டுக்குத்தான் ₹12 கோடி முதல் பரிசு விழுந்தது. முடிவுகள் வெளியாகி ஒரு நாள் ஆகியும், வெற்றியாளர் இன்னும் வெளிவரவில்லை. முந்தைய அனுபவங்களைப் பார்க்கும்போது, வெற்றியாளர் பொதுவெளியில் தன்னைக் காட்டிக்கொள்ள மாட்டார் என்றும், தோன்றினாலும் பெயர், விவரங்களை வெளியிட மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

₹12 கோடி பரிசு விழுந்ததால், பாலக்காட்டிலுள்ள ஜஸ்வந்த் லாட்டரி ஏஜென்சி இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளது. ஜெ. பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான பி.எஸ். வருஷ லாட்டரி ஏஜென்சி, ஜஸ்வந்த் ஏஜென்சியிலிருந்து வாங்கி விற்ற டிக்கெட்டுக்கே முதல் பரிசு விழுந்துள்ளது. மேலும், இரண்டாம் பரிசுகளில் ஒன்றும் இவர்கள் விற்ற டிக்கெட்டுக்கே விழுந்துள்ளது. வளையாறில் உள்ள இவர்களது ஏஜென்சியிலிருந்துதான் இரண்டாம் பரிசு டிக்கெட் விற்பனையானது.

கோழிக்கோட்டில் ஜஸ்வந்த் லாட்டரியின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக ஏஜென்ட் ஜஸ்வந்த், ஏசியாநெட் நியூஸிடம் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் தாங்கள் ஏஜென்சியைத் தொடங்கியதாகவும், இந்த அதிர்ஷ்டம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். 

12 வருடங்களாக லாட்டரி விற்பனை செய்து வருபவர் பிரபாகரன். 'கடை தொடங்கி 12-வது வருடம். இந்த நேரத்தில்தான் ₹12 கோடி முதல் பரிசும் விழுந்துள்ளது. முதல் பரிசு விழுந்ததில் ரொம்ப பெருமையா இருக்கு' என்று பிரபாகரன் கூறினார்.