ரியாசி தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானில் கொலை; வைரல் வீடியோவில் தகவல்!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த ரியாசி பயங்கரவாத தாக்குதலின் மூளையாக இருந்தவர் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத மனிதர்களால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த ரியாசி பயங்கரவாத தாக்குதலின் மூளையாக இருந்தவர் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத மனிதர்களால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் நடைபெற்ற பயங்கரவாத்த் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு மூளையாக இருந்தவரை ஒழிப்பது குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து இரண்டு பேர் பேசும் சிறிய வீடியோ சமூக வலைத்தள்ளில் வைரலாகப் பரவுகிறது.
நர மாமிசம் எல்லாம் சகஜம்! சக மனிதனையே கொன்று உண்ணும் பழங்குடி மக்கள்! எங்க இருக்காங்க தெரியுமா?
16 வினாடிகள் கொண்ட வீடியோவில், வெள்ளைச் சட்டை அணிந்த யூடியூபர் ஒருவர், மைக்கைப் பிடித்துக்கொண்டு பேசுவதைப் பார்க்க முடிகிறது. அவர் ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றி விவாதிக்கிறார். இந்தத் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் உள்ள சிவகோரி மற்றும் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்களுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, ரியாசியில் உள்ள தெரியத் கிராமத்திற்கு வந்தபோது பயங்கரவாதிகள் திடீரென பேருந்தைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பேருந்தில் இருந்த சக பயணிகளை எச்சரித்த வாலிபர் சவுரவ் குப்தா (21) துப்பாக்கி குண்டு பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கர்நாடகாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு! காங்கிரஸ் அரசை போட்டுத் தாக்கும் ஹர்தீப் சிங் பூரி!