thiruppathi vip dharshan
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 10 வாரங்களுக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வழங்கும் சிபாரிசு கடிதத்துக்கான விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , கோடை கால விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வி.ஐ.பி.பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது,
இதர நாட்களில் வி.ஐ.பி.பிரேக் தரிசனமும், வி.ஐ.பி. புரோட்டோக்கால் தரிசனமும் அனுமதிக்கப்படுகிறது.

எம்எல்ஏக்கள், எம்,பி,க்கள் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகிறது. காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை அனுமதிக்கப்பட்ட முதியோர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பிற்பகல் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.
மேலும் புரோட்டோக்கால் தரிசன வி.ஐ.பி. பக்தர்களும், கலாசார நிகழ்ச்சிகள் நடத்தும் பக்தர்களுக்கும் வி.ஐ.பி.தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆர்ஜித சேவைகள், 300 ரூபாய் டிக்கெட் தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக வெட்டிவேரால் தயார் செய்யப்பட்ட பாய்கள் நிழலுக்காக தரிசன வரிசை தடுப்புக் கம்பிகளில் போடப்படும். என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரிசன வரிசைகளில் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், மோர் வழங்கப்படும். ஆந்திர மாநில கைத்தறித்துறை சார்பில் தயார் செய்யப்பட்ட வேட்டிகள் பக்தர்களுக்கு தரிசன வரிசையிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
