நிலவில் தரையிறங்க இருந்த இறுதி நிமிடங்களில் விக்ரம் லேண்டர் தனது சிக்னலை இழந்தது. இதையடுத்து அதைப்பற்றி ஆய்வுகள் மேற்கொண்டு மீட்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது நிலவில் விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என்பது துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அது இருப்பிடம் தெரிந்த போதும் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த அவர், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முழு அளவில்  முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.