ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பொற்காசுகள் கண்டெடுப்பு: இந்திய தொல்லியல் துறை தகவல்!
ஆந்திர மாநிலத்தில் விஜயநகர பேரரசின் பொற்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோயில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் 450க்கும் மேற்பட்ட பொற்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை முனிரத்தினம் ரெட்டி கூறுகையில், கண்டெடுக்கப்பட்டுள்ள பொற்காசுகள் 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்தது. இவை விஜயநகர மன்னர் ஹரிஹர I மற்றும் II, டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார். ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி சுல்தான் நாணயங்களின் சித்தரிப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்திரயான்-3 திட்டத்தின் ஆயுள் 14 நாள்தானா? அதற்குப் பின் செயல்பட வாய்ப்பு இல்லையா?
பழமையான கோவிலுக்கு அருகில் இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய முனிரத்தினம் ரெட்டி, “இடைக்காலங்களில், முறையான வங்கி அமைப்பு இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை கோவில்களில் சேமித்தனர்.” என்றார்.
இந்த தங்க நாணயங்களை ஆந்திர மாநில தொல்லியல் துறை இன்னும் கைப்பற்றவில்லை. தொல்லியல் துறையின் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ள இந்த தங்க நாணயங்களைப் பாதுகாக்குமாறு திருப்பதி தொகுதி எம்பியை முனிரத்னம் வலியுறுத்தியுள்ளார்.