நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. X, Y, Z, Z+, SPG என பல்வேறு பிரிவுகளில் பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 11 பேர் பிஸ்டன் மற்றும் ஸ்டன் கன் உடன் சுழற்சிமுறையில் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர். உளவு அமைப்புகள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் பிரபலங்கள் மற்றும் தலைவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. 

இந்தியாவை பொறுத்த வரை பிரதமர், குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், அச்சுறுத்தல் பட்டியலிலிருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அதென்ன Y பிரிவு பாதுகாப்பு? விஜய்க்கு திடீரென வழங்கப்பட்டது ஏன்? அதன் சிறப்பம்சங்கள் என்ன?

அந்த வகையில் X, Y, Z, Z+, SPG ஆகிய வகைகளில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பெரும் பிரபலங்கள், அரசியல்தலைவர்கள் யார்? யார்? என்று பார்க்கலாம். 

X பிரிவு : X பிரிவில் 2 பர்சனல் செக்யூரிட்டி ஆபிசர்கள் 24 மணி நேரம் பாதுகாப்பு அளிப்பார்கள். நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பிரிவினருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 

Y பிரிவு : காஷ்மீர் ஃபைல்ஸ் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது விஜய்க்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Y+ பிரிவு : ஷாருக்கான், சல்மான் கான், கங்கனா ரனாவத், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோருக்கு இந்த வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

73 மணி நேரத்தில் 15 மாநிலங்களை கடக்கும் இந்தியாவின் ஒரே எக்ஸ்பிரஸ் ரயில் இது தான்!

Z பிரிவு : டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தராண்டின் புஷ்கர் சிங் தாமி, பாபா ராம்தேவ், அமீர் கான் உள்ளிட்டோருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 

Z + பிரிவு : தேசிய பாதுகாப்பு படை எனப்படும் என்.எஸ்.ஜி குழுவினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல் யோகி ஆதித்யநாத், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நயுடுடு ஆகியோருக்கு இந்த வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

SPG பாதுகாப்பு : இந்தியாவின் உச்சபச்ச பாதுகாப்பாக SPG பாதுகாப்பு கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கப்படும். முன்னதாக ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அது நீக்கப்பட்டது. தற்போதைய சூழலில் பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.