Viral Video: கடையில் நூடுல்ஸ் சாப்பிட போறீங்களா? இதை கொஞ்சம் பாருங்க.! சர்ச்சை கிளப்பிய வைரல் வீடியோ
இந்தியாவில் நூடுல்ஸுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீன உணவான நூடுல்ஸ் சுவைக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம்.
பலவகையான காய்கறிகளை சேர்ப்பதில் இருந்து மசாலாப் பொருட்கள் என ஆரோக்கிய வகைகள் அனைத்தையும் சேர்த்து சமைக்கலாம்.
குழந்தைகள் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற செய்வதற்கான அற்புதமான வழிகளில் இதுவும் ஒன்றாகும். 5 நிமிடத்தில் சீக்கிரமாக செய்யக்கூடியதாக இருப்பதால், நம் அனைவரின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த நிலையில் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
இந்த வீடியோ நீங்கள் பார்க்கும்போது நிச்சயம் அடுத்தமுறை நூடுல்ஸ் சாப்பிட யோசிப்பீர்கள். தொழிற்சாலைகளில் நூடுல்ஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று இதில் பாருங்கள். நீங்கள் வீட்டிலேயே நூடுல்ஸைத் தயாரிக்கலாம் அல்லது ஒரு ஹோட்டலில் ருசிக்கலாம், ஆனால் சாலையோர உணவகங்களில் விற்கப்படும் நூடுல்ஸின் சுவையை எதுவும் மிஞ்சாது.
சரியான உபகரணங்கள் மற்றும் சுகாதாரம் இல்லாமல் தொழிலாளர்கள் கவனக்குறைவாக எப்படி நூடுல்ஸ் தயாரிக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
மாவை வெறும் கைகளால் கையாள்வது முதல் அழுக்குப் பாத்திரங்களில் வைத்து அழுக்குத் தரையில் வீசுவது வரை, இதை பார்க்கும் போது, நூடுல்ஸ் இப்படித்தான் உருவாக்கப்படுகிறதா ? என்றே கேள்வி எழுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..2000 ஆண்டு பழமை! மழைக்காடுகளுக்கு உள்ளே புதைந்து கிடந்த மாயன் நகரம் - எங்கு இருக்கு தெரியுமா?
இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!