ஆபாசப் படம் பார்த்து சிக்கிய மற்றொரு பாஜக எம்எல்ஏ! இந்த முறை திரிபுரா சட்டப்பேரவையில்!
திரிபுராவில் பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது தன் மொபைல் போனில் ஆபாசப் படம் பார்த்து மாட்டிக்கொண்டிருக்கிறார்.
திரிபுராவில் பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் அந்த மாநில சட்டப்பேரவையில் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபை கூட்டத்தொடரின் போது பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது மொபைல் போனில் ஆபாசப் படம் பார்த்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் பாக்பாசா தொகுதியின் எம்.எல்.ஏ., ஜாதவ் லால் நாத், மாநில பட்ஜெட் தொடர்பான விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கும்போது ஆபாசப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பேசிக்கொண்டிருப்பதையும் பகிரப்பட்டுவரும் வீடியோவில் காணலாம்.
வணிகப் போட்டி வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,338 கோடி அபராதம் கட்டாயம்
லால் நாத்தின் பின்னால் அமர்ந்திருந்த யாரோ எடுத்த அந்த வீடியோவில், லால் நாத் மொபைலை ஸ்க்ரோலிங் செய்வதையும், ஆபா வீடியோவைக் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. இந்த வீடியோ பரவியதை அடுத்து பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத்திடம் விளக்கம் கேட்டு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், லால் நாத் தன் மீதான வீடியோ குற்றச்சாட்டுகள் கூறித்து இதுவரை ஏதும் பதிலளிக்கவில்லை. கூட்டம் முடிந்தவுடன் அவர் வழக்கம்போல சட்டசபை வளாகத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
பாஜக தலைவர் ஒருவர் பொது இடத்தில் ஆபாசத்தைப் பார்த்து பிடிபடுவது இது முதல் முறை அல்ல. 2012ஆம் ஆண்டில், கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்றபோது, அமைச்சர்களாக இருந்த இரண்டு பாஜகவினர் மாநில சட்டசபைக்குள் தங்கள் தொலைபேசிகளில் ஆபாச வீடியோ பார்ப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிக்கிய லக்ஷ்மண் சவாதி மற்றும் சிசி பாட்டீல் ஆகியோர் பின்னர் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
ராகுல் காந்தியைச் சும்மா விடமாட்டேன்! வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி சவால்!