குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கைய்யா நாயுடு இன்று  அதிகாலை காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அவரை எதிர்த்தும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை வென்று புதிய குடியரசுத் துணைத் தலைவரானார்.

இந்நிலையில் வெங்கய்யா நாயுடு இன்று அதிகாலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். இதற்காக பெங்களூருவில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த வெங்கய்யா நாயுடு, அங்கிருந்து கார் மூலம் திருமலை சென்றார். 

அங்கு அவரை அதிகாரிகளும், பாஜகவினரும் வரவேற்றனர். பின்பு இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விடுதயில் தங்கிய வெங்கையா நாயுடு இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை அடுத்து திருமலையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.