துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னையில் சில நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வந்திருந்தார் . அதை முடித்து விட்டு பகல் 12  மணியளவில் சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் . அவரை ஆளுநர் பன்வரிலால் , துணை முதல்வர் பன்னீர் செல்வம் ,அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர் .

அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருண் ஜெட்லியின் மரண செய்தி தெரிவிக்கபட்டிருக்கிறது . உடனே ஹெலிகாப்டர் பாதி வழியில் மீண்டும் சென்னைக்கு திரும்பியது . வெங்கையா நாயுடு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மளிகை சென்றிருக்கிறார் .

டெல்லி செல்லும் விமானத்தில் அவர் உடனடியாக புறப்பட இருக்கிறார் , அங்கு அருண் ஜெட்லிக்கு மரியாதையை செலுத்தும் அவர் நாளை இறுதிச் சடங்கிலும் பங்கேற்கிறார் .இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கும் வெங்கையா நாயுடு , அருண் ஜெட்லியின் மறைவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அவரின் இறப்பு  தேசத்திற்கு மட்டுமில்லாது தனக்கும் பேரிழப்பு என்று கூறியிருக்கிறார்.