Vengana Naidu deputy president of Delhi AIIMS hospital has been admitted due to illness.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கூடியதால் மருத்துவமனையில் வெங்கையா நாயுடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிக ஒய்வு எடுக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் 13வது குடியரசுத் துணை தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்றார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கூடியதால் மருத்துவமனையில் வெங்கையா நாயுடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிக ஒய்வு எடுக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.