மின்சார வாரிய ஊழியரின் அலட்சியத்தால் மகாராஷ்டிராவில் காய்கறி வியபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மின்சார யூனிட்ஸ் குறிக்கும்போது ஒரு புள்ளி தள்ளி வைத்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத், புந்த்லி நகரைச் சேர்ந்தவர் ஜகன்னாத் நேஹாஜி ஷெல்கி (36). இவர் அப்பகுதியில் காற்கறி கடை நடத்திவருகிறார். மின்சார கட்டணத்தை ஒவ்வொரு தவணையும் தவறாமல் கட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேஹாஜி-க்கு இந்த மாதம் மின்சாரம் கட்டணம் ரூ.8.64 லட்சம் கட்ட வேண்டும் என்றும் மின்சார வாரியம், கடந்த வாரம் கட்டண ரசீதை அனுப்பியுள்ளது.

மின்சார கட்டண ரசீதில், 61,178 யூனிட்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு ரூ.8.64 லட்சம் கட்ட வேண்டும் என்று வந்துள்ளது. இதனைப் பார்த்த நேஹாஜி, அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மின்சார அலுவலகத்துக்கு பல முறை சென்று புகார் கூறினார். 

இந்த கட்டணத்தை கட்ட வேண்டும் என்றும் மின்சாரவாரிய அலுவலகர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் எந்த பலனும் அவருக்கு கிட்டவில்லை. இதனால நேஹாஜி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். 

இந்த நிலையில், நேஹாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேஹாஜி தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேஹாஜி வீட்டில் போலீசார் சோதனையிட்டதில், அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், என் தற்கொலைக்கு காரணம் அதிகமாக வந்த மின்சார கட்டணம்தான் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.