Asianet News TamilAsianet News Tamil

அம்பானியின் VANTARA.. 2000க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு ஓர் சரணாலயம் - அரசின் அனுமதி உள்ளதா? வெளியான உண்மை!

Ambani's VANTARA : முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவருடைய வனவிலங்கு பாதுகாப்பு கனவு குறித்த பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

VANTARA anant ambanis 3000 acre animal shelter what is happening inside ans
Author
First Published Mar 3, 2024, 7:56 PM IST

முகேஷ் அம்பானிக்கு உலக அரங்கத்திலேயே அறிமுகம் தேவையில்லை, அதேபோலத்தான் அவருடைய இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் எவ்வித அறிமுகமும் தேவையில்லை. வருகின்ற ஜூலை மாதம் அவருடைய திருமணம் பிரபல தொழிலதிபருடைய மகளான ராதிகா மெர்ச்சண்ட் என்பவருடன் நடக்க உள்ள நிலையில், ஆனந்த் அம்பானியின் ஓர் கனவு திட்டம் குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 

சில தினங்களுக்கு முன்பு ஆனந்த் அம்பானி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலானது. அதில் தான் சிறுவனாக இருந்த பொழுது சாலையில் தன் தாயோடு பயணித்து கொண்டிருந்தாராம். அப்போது அடிபட்ட ஓர் யானை கடும் வெயிலில் அவதிப்பட்டு செல்வதை கண்டதாகவும், உடனே அந்த யானைக்கு நாம் உதவ வேண்டும் என்று தான் தாயிடம் அவர் கூறியதாகவும், தன் தாயும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறினார். 

VANTARA anant ambanis 3000 acre animal shelter what is happening inside ans

பிரதமர் மோடி 3 நாட்களில் 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம்!

அப்போது அவருக்கு வயது பெறும் 12 தான், இந்த சூழலில் இப்பொது தன் கனவை நனவாக்கும் வகையில் குஜராத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவை விட இரண்டு மடங்கு பெரிய ஓர் வனவிலங்கு சரணாலயத்தை தற்பொழுது உருவாக்கி வருகின்றார் ஆனந்த் அம்பானி. VANTARA என்கின்ற இந்த 3000 ஏக்கரில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் 200க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகிறதாம். 

அதேபோல தமிழகத்திலிருந்து 1000கும் மேற்பட்ட முதலைகள், ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கங்கள் இப்படி பல வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட வனவிலங்குகள் இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் யானைகளுக்கு என்று ICUவுடன் கூடிய பிரத்தியேகமாக உள்ள மருத்துவமனைகளில் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று இந்த VANTARAவிற்குள் இருக்கிறது என்றால் அதன் பிரம்மாண்டத்தை நாமே யூகித்துக்கொள்ளலாம். 

இங்குள்ள மிருகங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஜெர்மனி நாட்டை சேர்ந்த வனவிலங்கு மருத்துவர்கள் இந்த VANTARAவிற்குள் பணியாற்றி வருகிறார்கள் என்றும், இந்தியாவில் இருந்தும் பல சிறந்த வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் மருத்துவர்கள் இங்கு பணி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் இப்படி 2000திற்கும் மேற்பட்ட வனவிலங்குகளோடு சுமார் 3000 ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இந்த வனவிலங்கு சரணாலயத்திற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அல்லது அம்பானி குடும்பம் என்பதால் சட்ட விதிகள் மீறப்பட்டதா? என்பது குறித்த கேள்விகள் இப்பொது நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஓர் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள மிருகங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட மிருகங்கள் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயிகள் வைக்கும் பொறிகளிலும், சாலைகளில் நடக்கும் விபத்துகளிலும் அடிபட்ட சிறுத்தைகள் மற்றும் யானைகள் இங்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு, அவை உடல் நலம் தேறிய பிறகு அங்கேயே தங்களுடைய வாழ்க்கையை கழிக்கின்றன. 

VANTARA anant ambanis 3000 acre animal shelter what is happening inside ans

தமிழகத்தில் இடப்பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்த சுமார் 1000 முதலைகள் தற்பொழுது இந்த வனவிலங்கு சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றி திரிவதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபொழுது, அங்கே பாதுகாக்க முடியாத அளவுக்கு சென்ற நீர் யானைகள் உட்பட்ட பல மிருகங்களை அங்கிருந்து இங்கு கொண்டு வந்து தற்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

இப்படி உடல்நலம் சரியில்லாமல், அல்லது பிற பாதிப்புகள் ஏற்பட்ட வனவிலங்குகள் அனைத்தும் இங்கு கொண்டுவரப்பட்டு அவற்றுக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல உணவுகள் அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான முழு அதிகாரத்தையும், உரிய சட்டபூர்வமான விதிகளையும் அரசிடமிருந்து பெற்று இது நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வளர்ந்த இந்தியா 2047.. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு ஆலோசனை..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios