2வது முறையாக எருமை மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்.. அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் !

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாடுகள் மீது மீண்டும் மோதி இரண்டாம் முறையாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

Vande Bharat Express Hits Cow Day After Buffalo Collision Broke Train Nose

இந்தியாவில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், ரயில்களின் பயணிகளுக்கு சொகுசு பயணத்தை ஏற்படுத்தி கொடுக்கவும் மத்திய அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்தது. அதன்படி ‛வந்தே பாரத்' ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதல் முதலாக டெல்லி - வாரணாசி இடையே ‛வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

Vande Bharat Express Hits Cow Day After Buffalo Collision Broke Train Nose

இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?

முந்தைய 2 வந்தே பாரத் ரயில்களை விட இந்த ரயிலில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வந்தே பாரத் 2.0 எனும் திட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. முந்தைய 2 வந்தே பாரத் ரயில்கை ஒப்பிடும்போது, இதன் எடை 38 டன் அளவுக்கு குறைக்கப்பட்டு 392 டன் எடையில் உருவாக்கப்பட்டது.

காந்திநகர் - மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் 30ம் தேதி குஜராத்தில் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார். நேற்று மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் காந்திநகருக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. காலை 11:15 மணியளவில் பட்வா-மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வேகமாக சென்றது.

இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

Vande Bharat Express Hits Cow Day After Buffalo Collision Broke Train Nose

அப்போது ரயிலுக்கு நடுவே எருமை மாடுகள் கூட்டமாக வந்தன. இதையடுத்து ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. இருப்பினும் ரயில் எருமை மாடுகளின் மீது மோதி நின்றது. இந்நிலையில், இன்று காந்திநகர் - மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே எருமைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியது. இது இரண்டாவது விபத்து ஆகும்.

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios