நாம் வாழும் இந்த சமூகம் பெண்களை மையமாக வைத்துதான் உள்ளது. பெண் இல்லாத உலகம்  இருண்ட உலகமாகத்தான் இருக்கும்.

பழங்காலம் முதலே, பெண்கள் வேட்டைக்கு சென்று  உணவை பிரித்து கொடுத்து வழிநடத்தி வந்தனர் என்பதெற்கெல்லாம்  சாட்சியங்கள்  பல  கூறப்படுவது உண்டு.

இதானாலே என்னமோ, பெண்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்கும் வகையில், பெண்களின் பெயர்களை  நதிகளுக்கும்,  கடவுளுக்கும்,  தாய்  மொழி என்றும் , தாய் நாடு  என்றும் கூறி போற்றி புகழ்கிறோம்.

இதே  போன்று பெண்கள் நினைத்தால் தான்  இனப்பெருக்கம்  என்பது  நடைபெறும் என்பதாலும், அதற்கு   முக்கியத்துவம்  கொடுக்கும்  வகையில்,  பெண்குறியை  கடவுளாக  வணங்குகின்றனர்.இதற்காக  விசித்திர  கோவிலையும்  வடிவமைகின்றனர்.

இவ்வாறு  வடிவமைக்கப்பட்டு  வழிபடும் கோவில்களில்  வேறு கடவுள் சிலை  எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை கோவில்கள் ஆந்திரா , கர்நாடகம் , அசாமில் உள்ள குவஹாத்திதி போன்ற இடங்களில் அமைந்துள்ளது. அதில் மிக பிரபலமான கோவில்தான் கமாக்யா. இந்த  கோவிலானது அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தியில் உள்ளது.இந்த கோவிலானது மாதத்தில் 3 நாட்கள் மூடி வைக்கப்படுகிறது.  பெண்களின்  மாதவிடாய் சுழற்சி போன்றே கடவுளுக்கும் இந்த 3  நாட்களை  ஒதுக்கப்பட்டு  பார்க்கப்படுகிறது.