பத்ரிநாத், கேதார்நாத் கோவில்கள் தகர்க்கப்படும்... மிரட்டல் கடிதத்தால் உத்தரகாண்ட்டில் உச்சக்கட்ட பதற்றம்!!
உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் கோவில்கள் மற்றும் ரயில் நிலையங்களை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து உத்தரகாண்ட் உஷார் நிலையில் உள்ளது.
உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் கோவில்கள் மற்றும் ரயில் நிலையங்களை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதம் வந்ததை அடுத்து உத்தரகாண்ட் உஷார் நிலையில் உள்ளது. சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்களுக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் சாதாரண தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று அக்.10 ஆம் தேதி ஹரித்வார் ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஏரியா கமாண்டர் என்று அழைக்கப்படும் ஜமீர் அகமது என்று கூறி, ஜம்மு காஷ்மீரில் ஜிஹாதிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க அக்டோபர் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை… துணை போகிறது அரசு… அதிமுக நிர்வாகி கண்டனம்!!
உத்தரகாண்டில் உள்ள அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் இதுபோன்ற மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. ஆனால் முதல் முறையாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது வெறும் புரளியா என்பது கண்டறியப்பட்டு வருவதாக அதிகாரி கூறியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு கன்வார் யாத்திரையின் போது ரூர்க்கியில் உள்ள அதிகாரிகளுக்கு இதுபோன்ற ஒரு கடிதம் கிடைத்தது. காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெளியானது தலைசிறந்த கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பட்டியல்… தமிழக மருத்துவர்கள் இடம்பிடித்து அசத்தல்!!
அக்டோபர் 25 அன்று உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார், டேராடூன், ரூக்கி, நஜிபாபாத், காஷிபூர் மற்றும் கத்கோடம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஹர் கி பைரி, பாரத் மாதா மந்திர், சண்டி தேவி மந்திர், மான்சா தேவி மந்திர் கோயில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களை அக்டோபர் 27 ஆம் தேதி தகர்க்கப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து உத்தரகாண்டில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.