'லின்-இன்' உறவை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை; பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம்!
இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலம் பொது சிவில் சட்டத்தை முதல் மாநிலமாக அமல்படுத்தி இருக்கிறது. இந்த சட்டத்தின்படி 'லின்-இன்' உறவில் இருப்பவர்கள் அதை பதிவு செய்ய தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்.
பொது சிவில் சட்டம்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு கலாசாரங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, வாரிசு விவகாரம் மற்றும் தத்தெடுத்தல் உள்ளிட்டவைகளில் ஒவ்வொரு மதங்களும் தனித்தனியாக விதிமுறைகளை கொண்டுள்ளன. நாடு முழுவதும் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் திருமணம், விவாகரத்து, வாரிசு விவகாரம் மற்றும் தத்தெடுத்தல் ஆகியவற்றில் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அரசு கொண்டு வந்தது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. 2022ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என பாஜக வாக்குறுதி கொடுத்து இருந்தது. அந்த வகையில் பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது.
லிவ்-இன் உறவு
உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின்படி, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் லிவ்-இன் (Live in relationship) என்று அழைக்கப்படும் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் உறவில் இருந்தால் பெற்றோரின் ஒப்புதலுடன் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்க்ள் அந்த மாநிலத்தில் 'லின் இன்' உறவில் இருந்தாலும் சரி, வெளிமாநிலத்தில் 'லின் இன்' உறவில் இருந்தாலும் சரி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அப்படி'லின் இன்' உறவுகளை பதிவு செய்ய தவறினால் அல்லது தவறான தகவல்களை வழங்கினால், அவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். லின் இன்' உறவை பதிவு செய்வதில் ஒரு மாதம் தாமதம் ஏற்பட்டாலும், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை
உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின்படி, அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதங்களை சேர்ந்த ஆண்களின் திருமண வயது 21. பெண்களின் திருமண வயது 18. இந்த வயதுக்கு முன் எந்த மதத்தினரும் திருமனம் செய்து கொள்ளக் கூடாது. மேலும் பலதார மணம், குழந்தை திருமணம் மற்றும் மூன்று முறை தலாக் செய்து விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான சீரான செயல்முறை இருக்கும்.
லிவ்-இன் உறவுகளிலிருந்து பிறக்கும் குழந்தைகளை ''லிவ்-இன் உறவில் இருக்கும் தம்பதிகளின் சட்டப்பூர்வமான குழந்தை'' என்று அங்கீகரிக்கப்படும். சமூகங்களிடையே சமத்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் இது கொண்டுள்ளது. ஒரு பெண் தனது கணவரை இழக்கும்போது அல்லது விவாகரத்து செய்யும்போது முஸ்லிம்களின் சில பிரிவுகள் பின்பற்றும் நிக்கா ஹலாலா மற்றும் இத்தாத் ஆகிய வழிமுறைகளை பொது சிவில் சட்டம் தடை செய்கிறது.