உத்தரகாண்டில் 150-மீட்டர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஜான்கிசாட்டி பகுதியில் இருந்து விகாஸ் நகர் பகுதியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 150 மீட்டர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பேருந்து பள்ளத்தாக்கில் இறங்கிய பிறகு சில மீட்டர் தொலைவில் ஆற்றில் விழுந்ததால் உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து அறிந்த மாநில முதல்வர் மீட்புப் பணிகளை முடுக்கி விடும்படி அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.