உத்தரபிரதேசத்தில் தனியார் பேருந்தும் - வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மதரிபூர் எனும் கிராமத்தில் தனியார் பேருந்தும் சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. 

இந்த விபத்தில் உடல் நசுங்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.