uttar pradesh cm yogi criticize congress

காங்கிரஸ் அழிவுக்கான சின்னம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஜராத்தின் வால்சாத் நகரில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் என்ற பயங்கரவாதிக்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசினார். காங்கிரஸ் வளர்ச்சிக்கான சின்னம் இல்லை; அழிவுக்கான சின்னம்.

தனது சொந்த தொகுதியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட முடியாத ராகுல் காந்தி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

தேர்தல் பிரச்சாரங்களில் குஜராத் மக்களை ராகுல் காந்தி குழப்பி வருகிறார். குஜராத்தின் வளர்ச்சி பற்றி இன்றைக்கு பேசுபவர்கள், கடந்த 70 ஆண்டுகளாக வளர்ச்சி குறித்து சிந்திக்கவில்லை. தங்களது வளர்ச்சி, குடும்பம் மற்றும் இடைத்தரகர்களின் வளர்ச்சிக்குத்தான் அவர்கள் உதவினரே தவிர நாட்டின் வளர்ச்சிக்கு உதவவில்லை. காங்கிரஸ் கட்சியினர் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றிருந்தால், பிரதமர் மோடி ஏன் புல்லட் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும். 
10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், நேரு குடும்பத்தினரின் உத்தரவுப்படித்தான் பேசினார். மற்ற நேரங்களில் அமைதியாகத்தான் இருந்தார்.

இவ்வாறு காங்கிரஸை கதிகலங்க வைக்கும் அளவுக்கு யோகி ஆதித்யநாத் பேசினார்.