உத்தரபிரதேசத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே இன்று அதிகாலை கார் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்களில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் நசுங்கியிருந்ததால், கேஸ் கட்டர் மூலம் அதன் பாகங்களை வெட்டி எடுத்த பிறகே உடல்களை மீட்க முடிந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் நசுங்கியிருந்ததால், கேஸ் கட்டர் மூலம் அதன் பாகங்களை வெட்டி எடுத்த பிறகே உடல்களை மீட்க முடிந்தது. காயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், உயிரிழந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்தில் இறந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் பீகார் மாநிலம் போஜ்பூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.