US Citizenship : "வயசு வெறும் நம்பர் கண்ணா" 99 வயதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மூதாட்டி - முழு விவரம்!
US Citizenship : அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்ட ஒரு பதிவில், அமெரிக்காவின் புதிய குடிமகளாக 99 வயது இந்திய மூதாட்டியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளது.
99 வயதான இந்தியாவை சேர்ந்த மூதாட்டியான தைபாய் என்பவர், அமெரிக்க அரசின் குடியுரிமையை பெற்ற பிறகு குறிப்பிடத்தக்க வகையில் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். மகிழ்ச்சிகரமான இந்த அறிவிப்பை வெளியிட்டு, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் மையம் (USCIS) டாய்பாயை ஒரு "கலகலப்பான" மூதாட்டி என்று விவரித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்ட ஒரு பதிவில் "வயது என்பது வெறும் எண் என்பதை இந்த பெண்மணி நிரூபித்துள்ளார். எங்கள் ஆர்லாண்டோ அலுவலகத்தில் புதிய அமெரிக்க குடிமகளான ஆன இந்த 99 வயது முதியவருக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவைச் சேர்ந்த தைபாய், எங்கள் நாட்டிற்கான விசுவாசப் பிரமாணம் செய்ய ஆர்வமாக இருந்தார்" என்று பதிவிட்டுள்ளது.
யாரும் பார்க்காத ஆறாவது பெருங்கடல் கண்டுபிடிப்பு.. ஆனால் யாராலும் போக முடியாது.. ஏன் தெரியுமா?
தனது சக்கர நாற்காலியில் இருந்தபடி, அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழுடன் போஸ் கொடுக்கும் மனதைத் தொடும் தருணத்தையும் படம்பிடித்தது வெளியிட்டுள்ளது அந்த மையம். அந்த புகைப்படம் எடுக்கும்போது, அந்த மூதாட்டி தனது மகள் மற்றும் அந்த மையத்தின் மேலதிகாரியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கான விசா மனுக்கள், குடியுரிமை விண்ணப்பங்கள், புகலிட விண்ணப்பங்கள் மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பங்களை கையாள்வதில் USCIS பணியாற்றுகிறது. அமெரிக்காவில் பணிபுரிய நூற்றுக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசாக்கள் போன்ற புலம்பெயர்ந்தோர் அல்லாத தற்காலிக பணியாளர்களுக்கான மனுக்களையும் இந்த நிறுவனம் கையாள்கிறது.
Daibai குடியுரிமை பெற்றதை பலர் கொண்டாடி வரும் நிலையில், சில இந்திய X பயனர்கள் அமெரிக்கா ஏன் இந்த அவர்களின் குடியுரிமை செயல்முறையை முடிக்க இவ்வளவு நேரம் எடுத்தது என்று கேள்வி எழுப்புகின்றனர். அந்த இந்தியப் பெண் பல ஆண்டுகளாக தனது மகளுடன் புளோரிடாவில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.