லக்கா மாட்டிக்கிச்சு! பர்த் டே நம்பரில் லாட்டரி வாங்கிய பெண்ணுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசு!

லாட்டரி வெற்றியைப் பற்றி மேலும் கூறும் லக்கி மாம், "உலகிலேயே எனக்கு நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்" என்கிறார். 

US Woman Wins $1.4 Million Lottery Using Child's Birthday Numbers sgb

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் லாட்டரி நிறுவனம் நடத்தியந லக்கி டே லோட்டோ ஜாக்பாட்டில் ஒரு பெண் 1.4 மில்லியன் டாலரை வென்றுள்ளார். அவர் தனது குழந்தையின் பிறந்தநாள் நம்பரில் லாட்டரி டிக்கெட் வாங்கியதுதான் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லாட்டரியில் பரிசு கிடைத்திருப்பதை அறிந்த தருணம் பற்றிக் கூறும் அந்தப் பெண், "என் குழந்தை தூக்கத்தில் எழுந் அழுதது. நான் மீண்டும் படுக்கையில் படுக்கவைத்து மீண்டும் தூங்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது பொழுதுபோக்கிற்காக நான் எனது மொபைலை எடுத்து லாட்டரி அப்ளிகேஷனதைத் திறந்தேன். அதில் நான் 1.4 மில்லியன் டாலர்களை வென்றதாக இந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை" என்று ஆச்சரியத்துடன் சொல்கிறார்.

வெற்றி பெற்ற லாட்டரியை எப்படித் தேர்வு செய்தார் என்றும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். "நான் என் வேலைகளைப் பார்த்துக்கொண்டே லக்கி டே லோட்டோ ஜாக்பாட்டை விளையாடினேன். நான் விளையாடும்போது, எனது குழந்தைகளின் பிறந்தநாளை எனது அதிர்ஷ்ட எண்களாகப் பயன்படுத்தினேன்" என்று அவர் கூறுகிறார்.

இன்னுமா பேடிஎம் Fastag யூஸ் பண்றீங்க? உடனே இதைப் பண்ணுங்க... நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய அறிவிப்பு

US Woman Wins $1.4 Million Lottery Using Child's Birthday Numbers sgb

6, 8, 16, 17 மற்றும் 20 ஆகிய எண்களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். தனது வெற்றியைப் பற்றி மேலும் கூறும் அவர், "உலகிலேயே எனக்கு நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்" என்கிறார். 'அதிர்ஷ்டம்' என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

எந்த குழந்தையின் பிறந்தநாளை லாட்டரி எண்ணாகத் தேர்வு செய்யலாம் என்று தனது கணவரிடம் கேட்டதற்கு அவர் தன்னை கேலி செய்தார் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

"நான் வென்ற பிறகு, என் கணவரிடம் கேட்டேன், எந்த குழந்தையின் பிறந்தநாள் எங்களுக்கு ஜாக்பாட் வெல்ல உதவியது என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா?" என்று கேட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். குழந்தையின் பிறந்தநாள் மூலம் பரிசு கிடைத்துள்ளதால் அவருக்கு லக்கி மாம் என்ற செல்லப் பெயரும் கிடைத்துள்ளது.

மாருதி சுசுகி நெக்ஸா மாடலுக்கு ரூ.80,000 பல்க் டிஸ்கவுண்ட்! பலேனோ, ஜிம்னி கார்களுக்கு செம டீல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios