ஈரான் மீது மேல் கொடூர குண்டு போட்டு கொலை செய்த அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு காந்தி ஆசிரமத்தில் மரியாதையா என தமிழக கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 3-ம் தேதி ஈராக்கில் அமெரிக்க ராணுவம் திடீரென நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக அவ்வப்போது அமெரிக்கா படைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், 2 நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார். டிரம்ப் மனைவி மெலனியாவுக்கு வணக்கம் தெரிவித்து மோடி வரவேற்றார்.

பின்னர், இந்திய அதிகாரிகளை டிரம்புக்கு அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி, டிரம்புக்கு குஜராத் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கார்வரை சென்று டிரம்ப்பை சபர்மதி ஆசிரமத்திற்கு மோடி வழியனுப்பி வைத்தார். சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் புகைப்படத்துக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறப்பான பல்வேறு பொருட்கள் மற்றும் விஷயங்கள் குறித்து டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கினார். மேலும், டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா, பிரதமர் மோடியுடன் சபர்மரி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தனர்.

இந்நிலையில், பிரபல தனியார் டி.வி.யின் நிகழ்ச்சியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசும்போது;- ஈரான் மேல் கொடூர குண்டு போட்டு பொதுமக்களை கொன்ற அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு காந்தி ஆசிரமத்தில் மரியாதை கொடுப்பது வெட்கக்கேடானது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசாமி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை இந்தியாவுக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.