வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் அவரை அவரை கோவிலில் வைத்து உயிருடன் எரித்துக்கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள  உத்தரப்பிரதேசத்தில்  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் உன்னாவ் பகுதியில் குழந்தைகளுடன் வீட்டில்  தனியாக தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை இழுத்துச்சென்ற ஒரு கும்பல் அந்த பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்ததோடு உயிருடன் தீ வைத்து எரித்து கொன்றுள்ளது. இளம் பெண்ணை கர்ப்பை  சூறையாடிய அந்த வெறிபிடித்த கும்பல்   வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டது.

32 வயதான இந்த பெண்ணின்  கணவர் காசியாபாத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்கைள் உள்ளனர். கடந்த 13ஆம் தேதி கணவர் வேலைக்கு சென்றதை அடுத்து தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த பெண். அப்போது 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து உள்ளது. பின்னர் அவர் பலமுறை கெஞ்சியும் அவரை விடாமல் அந்த கும்பல் மாறி மாறி பாலியல் கதறக் கதறக் கற்பழித்துள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை அருகில் இருந்த கோவிலுக்கு இழுத்துச்சென்ற அந்த காம வெறிபிடித்த கும்பல் அந்த பெண்ணை சீரழித்ததும் இல்லாமல் உயிருடன் எரித்துள்ளது. இதில் அந்த பெண் உடல் கருகி உயிரிழந்தார்.

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்டது அராம் சிங், மகாவீர், சரண் சிங், குலு மற்றும் போனா ஆகிய 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.