உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவ கல்ரலூரி  மருத்துவமனையில்  ஆக்சிஜன் பற்றா குறையினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 70 ஐத் தாண்டியுள்ளது. நேற்று ஒரு நாளில் 11 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒரு உயிரிழந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை எழுபதை கடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம்  நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று ஒரு நாளில் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில்  இன்று மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தால் பலி எண்ணிக்கை எழுபதை கடந்துள்ளது. 

இதனிடையே, மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்று அங்கு நிலவிவரும் சூழ்நிலை தொடர்பாக ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்குள்ள தலைமை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மேற்கண்ட துயர சம்பவத்திற்கு காரணம் என்ன? என்று விசாரித்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். 

இதற்கிடையே, பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக பி.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.