பெற்ற மகனை விற்பனைக்கு வைத்த தந்தை! உ.பி.யில் நடந்த கந்துவட்டிக் கொடுமை!

தந்தை தனது மகனை விற்பனைக்கு வைத்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார்.

UP Man Forced To Put His 'Son On Sale' To Repay Loan In Aligarh sgb

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தந்தை ஒருவர் தனது மகனை விற்பனைக்கு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிகாரில் உள்ள ராட்வேஸ் பேருந்து நிலையத்தில் தந்தை ஒருவர், அறிவிப்பு பலகையை கழுத்தில் அணிந்தபடி குடும்பத்துடன் அமர்ந்திருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

"என் மகன் விற்பனைக்கு இருக்கிறான், அவனை விற்க விரும்புகிறேன்" என்று அந்த அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. அந்த நபர் தனது கடனை திருப்பிச் செலுத்த தனது மகனை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள சாலை ஓரங்களில் அமர்ந்திருந்தார். அந்த நபர் தனது உறவினர் ஒருவரிடம் கடன் பெற்றதாவும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக அந்த நபருக்கும் அவரது உறவினருக்கும் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நபர் தனது உறவினரிடம் ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். அதை சரியான நேரத்தில் அவரால் திரும்பத் தர முடியவில்லை. இதனால், அவரை உறவினர் மிக மோசமாக நடந்ததினார் என்றும் துஷ்பிரயோகம் செய்ததாகவும், கழுத்தில் பலகையை மாட்டி குடும்பத்துடன் சாலை அமர வைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், காவல்துறை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதும் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அலிகார் காவல்துறை தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “அவரது உறவினரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதால், பணத்தைத் திருப்பித் தராதது தொடர்பாக கராறு ஏற்பட்டது. நேற்று இரு தரப்பினரின் ஒப்புதலுடன் பிரச்சினை தீர்க்கப்பட்டது"  என்று கூறப்பட்டுள்ளது.

தந்தை தனது மகனை விற்பனைக்கு வைத்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார். "தன் மகனை விற்றுவிட்டதாக ஒரு தந்தை கழுத்தில் போர்டுடன் கதறி அழும் நிலைக்கு தள்ளப்படுவது தான், பாஜகவின் அமிர்தகாலம். இந்தப் படம் உலகம் முழுவதும் பரவி, மாநிலத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் களங்கம் ஏற்படுத்துகிறது" என அவர் விமர்சித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios