இதன் காரணமாக இந்த பகுதிகளில் மது மற்றும் இறைச்சி விற்பனையை அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆயோத்யா மற்றும் மதுரா கோவில்களை சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்து இருக்கிறார். இது குறித்து உத்திர பிரதேச மாநில அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அருகிலும் மதுராவில் அமைந்து இருக்கும் கிருஷ்ண ஜென்மபூமி அருகிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அயோத்தியில் உள்ள மதுபான விற்பனை மையங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தடை உத்தரவு:
இந்த தடை உத்தரவு இன்று (ஜூன் 1 ஆம் தேதி) அமலுக்கு வந்தது. இதன் மூலம் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளை சுற்றி அமைந்து இருக்கும் 37 மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. மதுபான விற்பனையை நிறுத்தி விட்டு, பால் விற்பனை செய்ய மதுபான வியாபாரிகளுக்கு அம்மாநில அரசு பரிந்துரை வழங்கி இருக்கிறது. மதுரவாவில் பால் பொருட்களுக்கு பெயர் பெற்ற பகுதி ஆகும்.

கடந்த ஆண்டு உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுக்க மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும் மதுராவில் இறைச்சி கடைகளுக்கும் தடை விதிக்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.
முந்தைய அறிவிப்புகள்:
செப்டம்பர் 2021 வாக்கில், மாநில அரசாங்கம் சார்பில் மதுரா-ரிந்தாவனை சுற்றி பத்து கிலோமீட்டர் பகுதிகளை யாத்திரை தளமாக அறிவித்தார். இதன் காரணமாக இந்த பகுதிகளில் மது மற்றும் இறைச்சி விற்பனையை அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. 2021 கிருஷ்ணோத்சவா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறி இருந்தார்.
இது தவிர வழிபாட்டு தலங்களான வாரணாசி, ரிந்தாவன், அயோத்தி, சித்ராகுட், தியோபந்த், தெவா ஷரிப், மிஸ்ரிக் நைமிஷரண்யா போன்ற பகுதிகளில் மதுபானம் மற்றும் அசைவ உணவு விற்பனைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்து இருந்தார்.
