Asianet News TamilAsianet News Tamil

லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி... விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் பிரபலங்கள்

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் மாலத்தீவு அரசியல் தலைவர்களால் கேலி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக பல பிரபலங்கள் கருத்து கூறியுள்ளனர்.

Unprovoked hate: Indian celebs back PM Modi's Lakshadweep pitch amid Maldives row sgb
Author
First Published Jan 7, 2024, 4:03 PM IST

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த விமர்சனத்திற்கு பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு ஜாம்பவான்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பதில் அளித்துள்ளனர். பிரதமரின் பயணம் மாலத்தீவு அரசியல் தலைவர்களால் கேலி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக பலர் கருத்து கூறியுள்ளனர்.

பாலிவுட் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், சல்மான் கான், ஜான் ஆபிரகாம் மற்றும் ஷ்ரத்தா கபூர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் சமூக வலைத்தளப் பதிவுகளில் பிரதமருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளனர். சிலர் மாலத்தீவு தலைவர்களின் விமர்சனத்துக்கு நேரடியாக பதில் கூறியுள்ளனர்.

நடிகர் அக்‌ஷய் குமார் மாலத்தீவு தலைவர்கள் கூறிய கருத்துகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து, பிரதமர் மோடி மீதுவெறுப்பு தூண்டப்பபடுகிறது என்று சாடியுள்ளார்.

1987இல் காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் மோடி நடத்திய நியாய யாத்திரை!

"மாலத்தீவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க இனவெறிக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடு குறித்து அவர்கள் இப்படி நடந்துகொள்வது ஆச்சரியமாக இருக்கிறது." என்றும் கூறியுள்ளார். உள்நாட்டுச் சுற்றுலாவை ஆதரிப்போம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Unprovoked hate: Indian celebs back PM Modi's Lakshadweep pitch amid Maldives row sgb

"எங்கள் பிரதமர் நரேந்திர மோடியை லட்சத்தீவின் அழகான, தூய்மையான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது" என்று நடிகர் சல்மான் கான் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஜான் ஆப்ரகாம், "லட்சதீவு செல்ல வேண்டிய இடம்" என்று கூறி கடற்கரைகளின் அசத்தலான படங்களைப் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்து, "இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது "அதிதி தேவோ பவ" என்ற தத்துவத்தில் ஆராய்வதற்கு நிறைய இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சை வலுத்து வரும் நிலையில் மேலும் பல பிரபலங்கள் இந்த விவாதத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 4ஆம் தேதி லட்சத்தீவுக்குச் சென்று, ஸ்நோர்கெல்லிங் செய்வது போன்ற படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இந்த படங்கள் வைரலானதை அடுத்து பலர் அவற்றை மாலத்தீவுடன் ஒப்பிட்டு, மாலத்தீவை விட சிறந்த சுற்றுலாத் தலம் என்று கூறினர். இதன் எதிரொலியாக மாலத்தீவு அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்தனர்.

சாட்டிலைட் மூலம் இன்டர்நெட் சேவைத் தொடங்க ரிலையன்ஸ் ஜியோ ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios