ஜனநாயகத்தின் ஆலயத்துக்கு ஆபத்து வந்துவிட்டது!: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் நமது ஜனநாயகக் கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Unprecedented security breach, dangerous threat to temple of democracy: MK Stalin on Parliament Attack sgb

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு பேர் புகைகுண்டுகளை வீசி தாக்கிய சம்பவம் ஜனநாயகத்தின் கோயிலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நமது ஜனநாயகக் கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது" என்று கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், "தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உடனடி விசாரணையைத் தொடங்க வேண்டும். எதிர்காலத் தவறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நாட்டின் முக்கியமான அமைப்பின் பாதுகாப்பை அனைத்து வலிமைகளையும் பயன்படுத்தி உறுதிப்படுத்த வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களை வளைத்துப் பிடித்த பாஜக எம்.பி. ஆர்.கே. சிங் படேல்!

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மேற்குவங்க பாஜக எம்.பி. காகென் முர்மு பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் அவைக்குள் குதித்தனர். கையில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற புகையை வெளியிடும் பொருளை வீசினார்.

சில எம்.பி.,க்கள் ஒன்று சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது, காவலர்கள் வந்து அவர்களைக் கைது செய்தனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த பின்பும் புகை குண்டுகளை வீசி அரசுக்கு எதிராக முழக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்தத் தாக்குதல் நடத்திய இருவரும் பாஜக எம்.பி. கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

ரூ.6000 நிவாரணத் தொகை யாருக்குக் கிடைக்கும்? தமிழக அரசின் அரசாணை வெளியீடு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios