தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவின் மகன் எனக்கூறி அரசு அலுவலரை தொலைபேசியில் மிரட்டிய நபரைஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து ஐதராபாத் போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

ஐதராபாத் நகரில் உள்ள போவன்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன் தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் ஒரு அரசு அலுவலர் என்றும், தன்னை ஒரு நபர்மஹாராஷ்டிராவின் ஆளுநரும், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவின் மகன் விவேக் என அறிமுகம் செய்தார்.  என்னிடம் இருக்கும் 180 சதுர அடி நிலத்தை ஒப்படைக்க கோரி தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசார், அந்த புகாரைப் பெற்று, அந்த தொலைபேசி அழைப்பை ஆய்வு செய்தபோது, அந்த அழைப்பைச் செய்தவர் பெயர் தர் ராவ் என்றும், ஆளுநர் வித்தியாசாகர் ராவின் மகன் விவேக்பெயரை போலியாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. தர் ராவுக்கும், விவேக்குக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இதையடுத்து, குற்றவியல்506 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர் ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.