Chandigarh University: ஆபாச வீடியோ விவகாரம்: சண்டிகர் பல்கலைக்கழகம் மூடல்: காப்பாளர் சஸ்பெண்ட்,3 பேர் கைது

பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரின் ஆபாச வீடியோ வெளியானபின் நடந்த போராட்டத்தையடுத்து, பல்கலைக்கழகத்தை வரும் 24ம் தேதிவரை மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

University closed until Saturday after Chandigarh Hostel Video Leak; 3 Arrests

பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரின் ஆபாச வீடியோ வெளியானபின் நடந்த போராட்டத்தையடுத்து, பல்கலைக்கழகத்தை வரும் 24ம் தேதிவரை மூட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் விடுதி காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், மாணவரின் ஆண் நண்பர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

University closed until Saturday after Chandigarh Hostel Video Leak; 3 Arrests

மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் மோடி கையாண்ட கேமராவில் மூடி இருந்ததா? உண்மையில் நடந்தது என்ன?

சண்டிகர் பல்கலைக்கழத்தில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென மாணவிகள் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம், போலீஸார் வந்து மாணவிகளுடன் பேச்சு நடத்தினர். தகவல்தொழிலநுட்பச் சட்டத்தில் முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வீடியோவில் இருக்கும் மாணவி தன்னைத்தானே ஆபாசமாக வீடியோ எடுத்து அதை இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஆண் நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். அந்த நபர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து, அந்த நபர் குறித்து போலீஸார் விசாரித்தனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி : இந்தியாவின் புதிய படைப்பாற்றல் மிக்கவர் !

ஆனால்,மாணவிகள் தரப்பிலே 60க்கும் மேற்பட்ட மாணவிகள் குளிக்கும் வீடியோ காட்சிகள் உலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேறு எந்தவீடியோவும் சமூகவலைத்தளத்தில் உலவவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

University closed until Saturday after Chandigarh Hostel Video Leak; 3 Arrests

இதையடுத்து, அந்த மாணவியின் ஆண் நண்பர், அவரின் மற்றொரு நண்பர், டிராவல் ஏஜென்சி நடத்தும் சன்னி மேத்தா ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பல்கலைக்கழக விடுதி காப்பாளர் ரஜீவிந்தர் சிங் உள்பட  2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்ற விடுதி காப்பாளர்ளும் இடமாற்றம்செய்யப்பட்டனர். விடுதிக்குள்வரும நேரம், வெளியே செல்லும் நேரமும்மாற்றி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. 

இந்த விவகாரத்தில் வெளிப்படையான, நேர்மையான விசாரணை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம், போலீஸார் வாக்குறுதி அளித்ததையடுத்து, மாணவரக்ள் கலைந்து சென்றனர். இதையடுத்து இன்று அதிகாலை 1.30 மணிஅளவில் மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை வரும் 24ம் தேதிவரை மூட நிர்வாகம் உத்தரவிட்டது.

போலீஸார்தரப்பில் கூறுகையில் “ மாணவிகளை ஆபாசமாக எடுத்த 60 வீடியோக்கள் உலவுவதாக புகார்கள் தெரிவித்தனர். ஆனால், விசாரணையில் அதுபோன்ற எந்த வீடியோவும் இல்லை, பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததாக வந்த செய்தியிலும் உண்மை இல்லை. வேறு எந்த மாணவி குறித்து எந்த வீடியோவும் எடுக்கப்படவி்ல்லை” எனத் தெரிவித்தனர்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில் " சண்டிகார் பல்கலைக்கழகத்தில் நடந்தது துரதிர்ஷ்டமான சம்பவம். இதில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பல்கலைக்கழகநிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறேன். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்." எனத் தெரிவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios