மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் மோடி கையாண்ட கேமராவில் மூடி இருந்ததா? உண்மையில் நடந்தது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி தொப்பி அணிந்து கேமராவைப் பயன்படுத்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சனிக்கிழமையன்று மத்திய பிரதேசத்தில் சீட்டா வகை சிறுத்தைகளை விடுவிக்கும் நிகழ்வின் போது பிரதமர் மோடி மூடி போடப்பட்ட கேமராவுடன் போஸ் கொடுத்ததாக பலர் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த படத்தை உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வீரேந்திர சவுத்ரி, அதிகாரப்பூர்வ தாமன் மற்றும் டையூ சேவாதல் டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியிட்டு இருந்தார். இவருடன் இந்த டுவிட்டை காங்கிரஸ் தேசிய செயலாளர் இஷிதா சேதா உள்ளிட்டோரும் பகிர்ந்து இருந்தனர்.
திரிணாமுல் காங்கிரஸின் ஜவஹர் சிர்காரும் ட்வீட்டை நீக்குவதற்கு முன் படத்தைப் பகிர்ந்துள்ளார். பிரதமரை விமர்சித்தும் இருந்தார். ஆனால், உண்மையான புகைப்படத்தைப் பார்த்தால், பிரதமர் மோடி கேமராவை சரியாகப் பயன்படுத்தியது தெளிவாகிறது. உண்மையான புகைப்படத்தில் கேமராவில் மூடி பொருத்தப்படவில்லை. இது பிரதமர் மோடி கேமராவை சரியாக பயன்படுத்தினார் என்பதைக் காட்டுகிறது.
மேலும் படிக்க:பிரதமர் நரேந்திர மோடி : இந்தியாவின் புதிய படைப்பாற்றல் மிக்கவர் !
மேலும் வைரல் படத்தை கவனித்துப் பார்த்தால், பிரதமர் மோடி பயன்படுத்தியது நிகான் கேமரா. ஆனால், கேமரா மூடியைப் பார்த்தால் கேனான் என்று எழுதப்பட்டு இருக்கும். காங்கிரஸும், திரிணாமுல் காங்கிரஸும் பகிர்ந்து கொள்ளும் படம் போலியானது என்பதற்கு இதுவே சாட்சி என்பது தெரிய வந்துள்ளது. இது உண்மை அறிதல் மூலமும் தெரிய வந்துள்ளது.
"திரிணமூல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி., நிகான் கேமராவின் எடிட் செய்யப்பட்ட படத்தை கேனான் மூடியுடன் பகிர்ந்துள்ளார். போலிப் பிரச்சாரத்தைப் பரப்ப இது போன்ற மோசமான முயற்சிகளை செய்கின்றனர். மம்தா பானர்ஜி பொது அறிவு இருப்பவர்களை பணியில் அமர்த்த வேண்டும்'' என்று மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க:Cheetah: pm modi birthday: பொருளாதாரமும், சூழியலும் முரண்பட்ட துறைகள் அல்ல: பிரதமர் மோடி