ஒருவர் ‘வந்தே மாதரம்’ பாடலை சத்தமாகப் பாடாவிட்டால் ஒன்றும் தவறு இல்லை என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

வந்தே மாதம் பாடலை பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக பாட வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின், மஹாராஷ்டிராவிலும் எம்.எல்.ஏ. ஒருவர் இதேபோன்ற உத்தரவை பள்ளி, கல்லூரிகளிலும் பின்பற்ற கோரிக்கை விடுத்தார். இதைத் தொட்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்தனர்.   இந்நிலையில், மத்தியஅமைச்சர் ஒருவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரான ராம்தாஸ் அதவாலே மத்திய அமைச்சராக உள்ளார். மும்பை புறநகர் கல்யாண் பகுதியில் நேற்றுமுன்தினம், மஹாராஷ்டிரா கிராமின் பத்ரிகர் சங்கத்தின் 11-வது ஆண்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “ வந்தே மாதரம் பாடல் பாடுவது என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரும் வந்தே மாதரம் பாடலை சத்தமாகப் பாட வேண்டும். அதேசமயம், ஒருவர் வந்தேமாதரம் பாடலை சத்தமாகப் பாடாவிட்டால் தவறு ஒன்றும் இல்லை’’ எனத் தெரிவித்தார்.