Asianet News TamilAsianet News Tamil

#Breaking:வேகமெடுக்கும் 3ஆம் அலை.. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா..

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 

Union Minister Rajnath Singh confirmed corona infection
Author
India, First Published Jan 10, 2022, 4:49 PM IST

இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஒமைக்ரான் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் ஒமைக்ரானால் 4,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் முதல்முறையாக கடந்த 227 நாட்களுக்குப்பின் ஒரேநாளில் 1.79 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் கடந்த 197 நாட்களில் இல்லாத அளவாக 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 ஆக அதிகரித்து, 2.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 227 நாட்களில் சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது இதுதான் முதல்முறையாகும். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 936 ஆகஅதிகரித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனாவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள்,திரை பிரபலங்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டிலேயே தன்னை தனிமையடுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தவறாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios