2 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ.. வரவேற்றார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை பிரதமர் மோடி சார்பாக வரவேற்றார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார்.
இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜி 20 இன் இந்தியாவின் தலைமைப் பதவி மற்றும் ஜி 7 உச்சி மாநாட்டில் ஜப்பானின் தலைமைத்துவத்திற்கான முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
ஜப்பான் பிரதமர், இந்தப் பயணத்தின் போது இந்தோ-பசிபிக் திட்டத்திற்கான தனது திட்டத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்றுள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று கூறப்படுகிறது.
சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ உறுதியின் பின்னணியில் இந்தோ - பசிபிக் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையை குறித்தும் பிரதமர் மோடி மற்றும் கிஷிடா இடையேயான பேச்சு அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 50 செலுத்தினால் போதும்.. ரூ.35 லட்சம் ரிட்டன் கிடைக்கும் - அஞ்சலகத்தின் அருமையான திட்டம்
இதையும் படிங்க..நீங்க காதலில் பிரேக் அப் ஆனவரா.? கவலைப்படாதீங்க உங்களுக்கும் இருக்கு பக்காவான இன்சூரன்ஸ்