ராகுல் காந்தி வரிசையில் அரவிந்த் கெஜ்ரிவால்.. இவரும் பொருளாதார மேதை தான் - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பணமில்லை எனக் கூறி அக்னிபாதை திட்டத்தை கொண்டு வந்துள்ளது’ என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
‘கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் ரூ.20 லட்சம் கோடியாக இருந்தது. இது இப்போது ரூ.40 லட்சம் கோடியாகி உள்ளது. மத்திய அரசு ஒரு புறம் பணக்காரர்கள் மற்றும் தங்களது நண்பர்களின் கடனை தள்ளுபடி செய்ய ரூ.10 லட்சம் கோடியை செலவிட்டதுடன் பெரிய நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளது. மற்றொரு புறம் ஏழைகள் வாங்கும் உணவுப் பொருட்கள் மீது வரி விதிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !
ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பணமில்லை எனக் கூறி அக்னிபாதை திட்டத்தை கொண்டு வந்துள்ளது’ என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஆம் ஆத்மி நான்கு ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, ஜூலை 5ம் தேதி டெல்லி அரசு தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில் பார்க்கலாம். மத்திய அரசின் ஆதரவின் காரணமாகவே டில்லி அரசு நாகரீகமாக இருந்து வருகிறது என்று கூறுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘ராகுல்காந்தியை போல, அரவிந்த் கெஜ்ரிவாலும் பொருளாதார மேதையாக மாற முயற்சி செய்ய பார்க்கிறார். தன்னுடைய குடிமக்களுக்கு கடனை கொடுக்க விரும்புகிறார் போல.இதை கடைபிடித்தால் குடிமக்கள் தெருவில் தான் நிற்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி