காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரைக்கு மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். அவரது பேச்சில், மத்திய அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளின் தொலைப்பேசி அழைப்புகள் பெகாசஸ் மூலம் பதிவு செய்யப்படுவதாகவும், தொலைபேசியில் பேசும்போது கவனமாக இருக்குமாறு உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அற்பமான கிரிமினல் வழக்குகளைத் தொடுத்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நாடாளுமன்றம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் நீதித்துறை போன்ற ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன எனவும் ராகுல் காந்தி கூறினார்.

Bill Gates: கோவின் திட்டம் உலகத்துக்கே முன்மாதிரியானது - பிரதமர் மோடியைச் சந்தித்த பில் கேட்ஸ் பாராட்டு

Scroll to load tweet…

தனது பாரத் ஜோடோ யாத்திரையின்போது காஷ்மீரில் தாம் கண்ட முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விளக்கிப் பேசினார். ஆனால் ராகுலின் கருத்துகளுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாட்டில் அமர்ந்து இந்தியாவின் மீது சேற்றை வீச முயற்சிப்பதாகவும் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ராகுல் முயற்சிப்பதாக கண்டனம் தெரிவிக்கின்றனர்.

ராகுல் உரை குறித்து மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டர் தளத்தில் பதில் அளித்துள்ளார். அதில், பிரதமர் மோடியின் ஆட்சி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வித்தியாசமானது என்று கூறி ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். "வெளிநாட்டு பார்வையாளர்களை கவர (ராகுல் காந்தியின்) அரச குடும்பம் கடுமையாக முயற்சி செய்கிறார். ராகுலின் கருத்துகள் அவர் உண்மை நிலை மற்றும் நிஜ வாழ்க்கையில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார் என்று காட்டுகிறது" என்றும் அமைச்சர் ராஜீவ் சொல்கிறார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது! குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸ்!