செய்தியாளர் சந்திப்பில் மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்; குமாரசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான குமாரசாமிக்கு செய்தியாளர் சந்திப்பின் போது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான குமாரசாமி பெங்களூருவின் பிரபல தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாஜக இணைந்து நடத்தும் பாதயாத்திரை தொடர்பாக குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில் அவரது மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வழிந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் மற்றும் குமாரசாமியின் ஆதரவாளர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பக்கவாதம் பிரச்சினைக்காக அவர் தற்போது மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வரும் நிலையில், ஒவ்வாமை ஏற்பட்டு உடல் உஷ்ணம் காரணமாக அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி
இருப்பினும் அவருக்கு எதுபோன்ற சிகிச்சை அளிக்கப்படுகின்றது என்ற விளக்கம் வெளியாகவில்லை. ஆனால், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குமாரசாமி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாக நடைபெற்ற மதசார்பற்ற ஜனதாதளம், பாஜக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பெங்களூரு முதல் மைசூரு வரை பாதயாத்திரை செல்லவும், அப்போது சமீபத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது.