Union Minister Giriraj Singh said that democracy is safe for Hindus in India.
இந்தியாவில் இந்துக்களால்தான் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறியதாவது:-
அச்சுறுத்தல்
“இந்துக்களால்தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும்.
இந்துக்கள் பெரும்பான்மை குறையத்தொடங்கும் நாளில் இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
சமூக நல்லிணக்கம்
உத்தர பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் இந்துக்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்த மாற்றம் நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தலாகும். இந்துக்களின் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ள இடங்களில் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. தேசியவாதம் குறைய துவங்கியுள்ளது.
பாகிஸ்தானில்
இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ள வேளையில், பாகிஸ்தானில் பிரிவினைக்கு பிறகு இந்துக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
