மேற்கு வங்க மாநிலம், அசன்சோல் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, பேசிக் கொண்டிருந்தபோது, விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். இதனால் எரிச்சல் அடைந்த சுப்ரியோ தனது பேச்சை நிறுத்திவிட்டு, மாற்றுத்திறனாளியை நோக்கி கோபமாக பேசியுள்ளார்.

ஒரு இடத்தில் அமராவிட்டால், ஒரு காலை உடைத்து விட்டு, ஊன்றுகோல் கொடுத்து விடுவேன் என்று கோபமாக கூறினார். மேலும் தனது பாதுகாவலரை அனுப்பி அந்த மாற்றுத்திறனாளி மீண்டும் நகர்ந்தால், அவரது ஒரு காலையையும், கையையும் உடைத்து விட்டு ஊன்றுகோலை கொடு என்றும் உத்தரவிட்டார். பபுல் சுப்ரியோவின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.