கடந்த 6 மாதத்தி்ல் மட்டும் மலைவாழ் மக்கள் 94 பேரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகீர் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில் தங்கி தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி மலைவாழ் மக்களை அவர்கள் படுகொலை செய்துவருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகீர் கூறியதாவது-

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 94 மலைவாழ் மக்களை படுகொலை செய்துள்ளனர். போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி அவர்கள் இந்த படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த படுகொலை நடத்துவதற்கு முன்னதாக அவர்களை சித்தரவதை செய்கின்றனர். அடித்தல், கத்தியால் குத்தி காயப்படுத்துதல் போன்ற சித்தரவதைகளை செய்கின்றனர். இவ்வாறு அவர் அந்த தெரிவித்துள்ளார்.