union government seeks facebook answer

பயனாளர்கள் குறித்த தகவல்களை செல்போன் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது தொடர்பாக, ஜூன் 20ஆம் தேதிக்குள் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற தேர்தல் ஆய்வு நிறுவனத்துடன், தனது வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை ரகசிய ஒப்பந்தத்தின் பேரில் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்பட 60 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது அண்மையில் தெரியவந்தது.

இது தொடர்பாக, வரும் 20ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் மன்னிப்புக் கோரிய பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் விவரங்களை பாதுகாக்க தவறியது ஏன் என்றும் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.