Asianet News TamilAsianet News Tamil

தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 

Union cabinet announcement to setup National Turmeric Board  smp
Author
First Published Oct 4, 2023, 6:08 PM IST

தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் மஞ்சள் உற்பத்திகளின் அபிவிருத்தியில் தேசிய மஞ்சள் வாரியம் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியம், மஞ்சள் தொடர்பான விஷயங்களில் தலைமைத்துவத்தை வழங்குவதுடன், நறுமணப் பொருட்கள் வாரியம், பிற அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும்.

மஞ்சளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு நன்மைகள் குறித்து உலகெங்கிலும் ஆர்வம் உள்ளது. இது விழிப்புணர்வு மற்றும் நுகர்வை மேலும் அதிகரிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்க சர்வதேச அளவில் புதிய சந்தைகளை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் புதிய தயாரிப்புகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், மதிப்புக் கூட்டப்பட்ட மஞ்சள் தயாரிப்புகளுக்கான நமது பாரம்பரிய அறிவை மேம்படுத்துவதிலும் தேசிய மஞ்சல் வாரியம் கவனம் செலுத்தும். குறிப்பாக, மஞ்சள் உற்பத்தியாளர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும், இது மதிப்புக் கூட்டல் மூலம் அதிக நன்மைகளைப் பெறும். தரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதோடு, அத்தகைய தரநிலைகளைக் கடைப்பிடிப்பதையும் ஊக்குவிக்கும்.

வாரியத்தின் செயல்பாடுகள் மஞ்சள் உற்பத்தியாளர்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும். இத்துறையில் கவனம் செலுத்துவதன் மூலமும், பண்ணைகளுக்கு அருகாமையில் அதிக மதிப்புக் கூட்டுவதன் மூலமும், விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு சிறந்த வருவாயை வழங்கும்.

வாடிகனில் தன்னுடன் இருந்த பெண் யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒடிசா முதல்வர்!

உலகிலேயே மஞ்சள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 11.61 லட்சம் டன் (உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75% க்கும் அதிகமானது) உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது, மேலும் இது நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மஞ்சள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சர்வதே மஞ்சள் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 62% ஆகும். 2022-23 ஆம் ஆண்டில், 207.45 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.534 லட்சம் டன் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொருட்கள் 380 க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது, தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளதால், அதன் நடவடிக்கைகள் மூலம், 2030 ஆம் ஆண்டில் மஞ்சள் ஏற்றுமதி 1 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios