பட்ஜெட் கூட்டத்தொடர் 2024: நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Union budget 2024 session Parliamentary Affairs Minister called all party meeting smp

மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு, பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதி கூடவுள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூடவுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. அரசு அலுவல்களின் அவசரங்களுக்கு உட்பட்டு விரைவாக நிறைவடையவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பாஜகவின் இரண்டாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டும் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட் இதுவாகும். பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இது என்ன நீதிமன்றமா ரயில்வே பிளாட்பார்மா? வழக்கறிஞருக்கு செமத்தியா டோஸ் கொடுத்த நீதிபதி சந்திரசூட்!

அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 11:30 மணிக்கு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும். அந்த சமயத்தில், வரவிருக்கும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கப்படும். அது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.

ராஜேஷ் தாஸுக்கு மீண்டும் எச்சரிக்கை: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பெரும்பாலும் தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், இடைக்கால பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெண் விவசாயிகளுக்கான பிரதமர் விவசாய நிதியை இரட்டிப்பாக்க இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழியப்படும் என தெரிகிறது. இதன் மூலம், அரசுக்கு ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகும் என கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios