திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றினால் 10 ஆண்டு சிறை! அமித் ஷா அறிமுகப்படுத்திய புதிய மசோதா!
மசோதாவை அறிமுகம் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதியில் அறிமுகப்படுத்திய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மசோதா தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்டிருக்கிறது.
இதன்படி பெண்ணை திருமணம், பதவி உயர்வு அல்லது வேலை வாய்ப்பு போன்ற பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஏமாற்றுவது, பெண்ணைத் திருமணம் செய்வதாகச் சொல்லி நம்ப வைத்து கைவிடுவது அல்லது உடலுறவு கொள்வது போன்ற குற்றங்களுக்கு இனி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
மசோதாவை அறிமுகம் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல சமூக பிரச்சனைகள் இந்த மசோதாவில் தீர்க்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
ஆயிரம் 5 லட்சமாக மாறும்! ஆண்களுக்கு மட்டும் அஞ்சல் துறை வழங்கும் பொன்மகன் சேமிப்புத் திட்டம்!
திருமண வாக்குறுதியை மீறிய பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறும் பெண்களின் வழக்குகளை நீதிமன்றங்கள் கையாண்டாலும், ஐபிசியில் இதற்கான குறிப்பிட்ட விதி எதுவும் இல்லை. புதிய மசோதாவில், “வஞ்சகமான முறையில் வாக்குறுதி அளித்து அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவோ, அதை நிறைவேற்றும் எண்ணம் இல்லாமல் அவளுடன் உடலுறவு கொண்டாலோ குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்." எனக் கூறப்படுகிறது.
கூட்டுப் பலாத்கார வழக்குகளில், 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க மசோதா வகை செய்கிறது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படலாம். அல்லது மரண தண்டனையும் கொடுக்கப்படலாம் என்று புதிய மசோதா கூறுகிறது.
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தமிழருக்கு 12 கசையடி... 18 ஆண்டு சிறை... சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு
கற்பழிப்பில் ஈடுபடும் எவருக்கும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. 18 வயதுக்குட்பட்ட தனது மனைவியுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது எனவும் புதிய சட்டம் வரையறுக்கிறது.
இந்த மசோதாக்களின்படி, பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு ஒரு பெண் இறந்தாலோ அல்லது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தாலோ, குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம் அல்லது மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.