Asianet News TamilAsianet News Tamil

உத்தராகண்டில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 40 தொழிலாளர்கள்

4.5 கி.மீ. நீளமான இந்தச் சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமான பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

Under Construction Tunnel Collapses In Uttarakhand, 40 Workers Feared Trapped sgb
Author
First Published Nov 12, 2023, 4:27 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை அப்புறப்படுத்தி, சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கானுடன் சில்க்யாராவை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது சார் தாம் சாலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் நோக்கில் இந்த சுஉரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

மாட்டிக்காதீங்க! போலி இணையதளங்களைத் தொடங்கி தகவல்களைத் திருடி விற்கும் கேடி கும்பல்!

4.5 கி.மீ. நீளமான இந்தச் சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமான பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டது உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

Under Construction Tunnel Collapses In Uttarakhand, 40 Workers Feared Trapped sgb

மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கியிருப்பவர்களை மீட்க 200 மீட்டர் தூரத்திற்கு இடிபாடுகளை அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாட்டிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க உதவும் வகையில், ஆக்ஸிஜன் குழாயைச் இடுபாடுகளுக்குள் செருக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. மீட்புப் பணி குறித்துப் பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "சம்பவம் குறித்து அறிந்ததில் இருந்தே அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். தேசிய மற்றும் மாநில பேரிடம் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் விரைவில் மீட்கப்படவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தீபாவளி கின்னஸ் சாதனை! 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தி!

Follow Us:
Download App:
  • android
  • ios