பிரதமர் நரேந்திர மோடியை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி பேசியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சர்ஜிக்கல் ஸ்ரைக் ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி காட்டி, இந்தியாவின் சக்தியை உலகிற்கு அறியச் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறினார்.
இதனால், இந்தியாவின் மீது நல்ல மதிப்பு உருவாகியுள்ளது என்ற உமாபாரதி, எதிரிகளுக்கு நல்ல பாடத்தையும் இது கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதன் மூலம் பகவான் கிருஷ்ணரைப் போல பிரதமர் நரேந்திர மோடி உலகிற்கு ஒரு செய்தியைச் சொல்வதாக அவர் கூறினார். அதாவது, அன்பாக பழகுபவர்களிடம் நாங்கள் புல்லாங்குழல் வாசிப்போம். உபதேசம் நாடுபவர்களுக்கு கீதோபதேசம் வழங்குவோம். அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது பாதிப்பு எனில் சுதர்ஷன் சக்ராவை வைத்துதான் டீல் செய்வோம் என்று உமாபாரதி கூறியுள்ளார்.
