Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் அலர்ட் ஆகுங்கள்.. இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது அறிவிப்பு.. யுஜிசி மறுப்பு..

இனி வரும் அனைத்து செமஸ்டர்  தேர்வுகளும் நேரடி தேர்வுகளாகவே நடைபெறும் என பல்கலைகழக மானியக் குழுவான யுஜிசி அனுப்பியதாக கூறி கடிதம் ஒன்று வெளியான நிலையில் அந்த கடிதம் பொய்யானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

UGC statement online Exam
Author
India, First Published Dec 12, 2021, 4:17 PM IST

இனி வரும் அனைத்து செமஸ்டர்  தேர்வுகளும் நேரடி தேர்வுகளாகவே நடைபெறும் என பல்கலைகழக மானியக் குழுவான யுஜிசி அனுப்பியதாக கூறி கடிதம் ஒன்று வெளியான நிலையில் அந்த கடிதம் பொய்யானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின் 2வது அலை துவங்கியதால் மீண்டும் வகுப்புகள் மூடப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

UGC statement online Exam

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வுகளாக நடக்கும் என யு.சி.ஜி அறிவித்ததாக கூறி கடிதம் ஒன்று வெளியானது. டிசம்பர் 10 தேதி என்று குறிப்பிடப்பட்டு வெளியான அந்த கடிதம்  தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என்று  பல்கலைகழக மானிய குழு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். யுசிஜி கடிதத்தை போல் யாரோ ஒருவர் போலியான கடிதத்தை உருவாக்கி சமுக வலைதளங்களில் உலவவிட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் எழுதியதாக சமூக வலைதளங்களில் பரவிய அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் கல்லுாரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்றும் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடியாக தேர்வுகளை நடத்தவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

UGC statement online Exam

அண்மையில், தமிழகத்தில் நேரடியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் என அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இருந்தபோதிலும், ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என திட்டவட்டமாக அறிவித்தது.

இனி வரும் அனைத்து செமஸ்டர்  தேர்வுகளும் நேரடி தேர்வுகளாகவே நடைபெறும் என பல்கலைகழக மானியக் குழுவான யுஜிசி அனுப்பியதாக கூறி கடிதம் ஒன்று வெளியான நிலையில் அந்த கடிதம் பொய்யானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளது கல்லூரி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios